திருக்குறள் :
"எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய். "

பொருள் :
"வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய நோய் ஒன்றும் இல்லை"

வெள்ளி, 17 ஏப்ரல், 2020

கோவை சிவப்பிரகாச சாமிகளால் மேட்டுக்குப்பத்தில் நடத்தப்படும் வள்ளலார் சிறார்கள் முதியோர்கள் இல்லம்







கோவை சிவப்பிரகாச சாமிகளால்  மேட்டுக்குப்பத்தில் நடத்தப்படும் வள்ளலார் சிறார்கள் இல்லம்  முதியோர்கள்  காப்பகத்திற்கு 10000 பத்தாயிரம் நன்கொடை அளிக்கப்பட்டது 

கொரோனா வைரஸ் காலம் - சிவப்பிரகாச சுவாமிகள்

திங்கள், 15 ஜூலை, 2019

ஆதிரை நினைவு புத்தகப் பை

காட்டுமன்னார்கோயில் வட்டம் இராயநல்லூர் B.R.R நினைவு உதவிபெறும் தமிழ் வழி  ஆரம்பப் பள்ளியில்  பயிலும் அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளிக்கு புத்தகம் எடுத்து செல்லும் புத்தகப் பை ஆதிரை அறக்கட்டளை சார்பில் அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளி ஆண்டு விழாவில்  அளிக்கப்பட்டது.

வெள்ளி, 25 ஜனவரி, 2019

தமிழ் நாடு ''கசா புயல்'' துயர் மீட்பு பணிகளுக்காக ஆதிரை அறக்கட்டளை மூலம் பின்வரும் பங்களிப்பு தொகை அளிக்கப்பட்டது









நாள் :24/11/2018

தமிழ் நாடு ''கசா புயல்'' துயர் மீட்பு பணிகளுக்காக ஆதிரை அறக்கட்டளை மூலம் பின்வரும் பங்களிப்பு தொகை அளிக்கப்பட்டது .

1. தமிழர் கண்ணோட்டம் அறக்கட்டளை 10000
2.செம்மை நிமிர்வு திட்டம் 10000
3.அயர்லாந்து தமிழ்ச் சங்கம் - 8000(100 யூரோ)
4. பள்ளி நண்பர் குழு 3000
5. அண்ணாமலை பல்கலை கழக மாணவர் குழு 3000
----------------------------------------------------------------------------------------------------------------------
34000

(முப்பத்தி நான்காயிரம் மட்டும் )

திங்கள், 8 ஆகஸ்ட், 2016


ஆதிரையின் முதல் நினைவு நாள் அன்று குழைந்தை கௌதமின் உயிர் காக்கும் BMT எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்காக நிதி உதவி -06/08/2016



ஆதிரையின் முதல் நினைவு நாள் அன்று குழைந்தை கௌதமின்  உயிர் காக்கும் (BMT ) எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்காக நிதி உதவி 


ஆதிரை அறக்கட்டளை சார்பாக ,ஆதிரையின் முதல் நினைவு நாள் அன்று ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் தர்மாவரம் ஊரை சேர்ந்த கணேஷ் அவர்களின் குழைந்தை கௌதமின்  உயிர் காக்கும் BMT  எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்காக  இரண்டு லட்சம் ரூபாய் சோனி மணிப்பால் மருத்துவமனை (SONI Manippal hospital - JAIPUR) நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்டது . குழைந்தை சிகிச்சைக்கு பின் நலமுடனும் வளமுடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம் .






சனி, 6 ஆகஸ்ட், 2016

     ஆதிரை முதலாம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்வு - அரசு குழந்தைகள் மருத்துவமனை எழும்பூர் சென்னை




சிறுவயதிலேயே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதிரை அறக்கட்டளை சார்பில் மருந்துகளும் ,மருத்தவ உபகரணங்களும் தலைமை மருத்துவரிடம் வழங்கப் பட்டது.(நாள் -01/02/2016) 






ஆதிரை முதலாம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்வு

ஆதிரை முதலாம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்வு 


ஆதிரையின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்வு அன்று புதிய நம்பிக்கை மற்றும் புது வாழ்வு ஆதரவற்றோர் இல்லத்தில் (நியூ ஹோப் & நியூ லைப் ஆர்ப்பனேஜ் ,பெரும்பாக்கம் ,சென்னை-600100) இருக்கும் குழந்தைகளுக்கு உணவு உபசரித்து பிறந்தநாளை மனநிறைவுடன் கொண்டாடினோம் .